திருமலை

செங்கோட்டையிலிருந்து வடமேற்கில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்த தலம் சிறிய மலை மீது உள்ளது. இந்த மலை சுமார் 400 அடிகள் (120 மீ.) உயரம் கொண்டது. முருகப்பெருமான் கிழக்கு நோக்கி காட்சியளிக்கின்றான். தல விருட்சம் புளிய மரம். திருச்செந்தூர் போன்று இத்தலத்திலும் விபூதிப் பிரசாதம் பன்னீர் இலையில் தரப்படுகிறது. இத்தலத்தில் சித்திரை வசந்த விழா, ஐப்பசிப் பெருவிழா மற்றும் கார்த்திகைத் தெப்பத்திருவிழா போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் என்ற தலமே அருணகிரிநாதர் பாடிய திருமலை என்றும் சிலர் கூறுவர்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com